இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கின - மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 19, 2020

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கின - மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கிரியெல்ல, எலபாத்த, குருவிட்ட, எஹலியகொடை, பலாங்கொடை, ஓப்பநாயக்க, பெல்மதுளை, உட்பட மேலும் சில தாழ்நில பகுதிகள் பாரிய வெள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொக்குபொத்தகம தெரிவித்தார்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தில் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் பெரும்பாலன தாழ்நில பகுதிகளில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில் தத்தமது வீடுகளில் உள்ள பொருட்களை மாற்று இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இரத்தினபுரி நகரை அண்மித்த அல் மக்கியா பாடசாலை வீதி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், இரத்தினபுரி வெரலுப்ப வீதி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், இரத்தினபுரி சீவலி மைதான பகுதிகள் மற்றும் இரத்தினபுரி பட்டுகெதர, திருவானக்கெட்டிய ஆகிய தாழ்நில் பகுதிகள் மற்றும் மாவளை பிரதேசத்தின சில தாழ்நில பகுதிகள் உட்பட இரத்தினபுரி மாவட்டத்தில் மேலும் பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கி உள்ளது.
மேற்படி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யுமானால் இரத்தினபுரி நகரம் உட்பட இமமாவட்டத்தின் பெரும்பாலன பகுதிகள் முற்றாக நீரில் மூழ்க கூடிய அபாயம் உள்ளதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இரத்தினபுரி கொழும்பு பிரதான வீதியின் பதுல்பான எனும் இடத்தில் இன்று (19) காலை மண்சரிவு ஏற்பட்டதால் அவ்வீதியின் ஒரு பகுதி மண்திட்டு மற்றும் மரங்கள் கற்களால் மூழ்கியுள்ளது.

அத்தோடு இரத்தினபுரி புதிய நகரின் பிரதான வீதியில் இன்று(18) காலை மரங்கள் முறிந்து விழுந்ததில் பல மணி நேரம் போக்குவரத்திற்கு தடையும் ஏற்பட்டது.

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கடும் காற்று இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் வானம் இருண்ட நிலையில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

(காவத்தை விசேட நிருபர் - சிவா ஸ்ரீதரராவ்)

No comments:

Post a Comment