ஜாமிஆ நளீமிய்யாவின் கெளரவ பணிப்பாளர் கல்விமான் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரீ அவர்களின் மரணச் செய்தி கேட்டு கவலையடைகின்றேன் - சட்டத்தரணி ஹபீப் றிபான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 19, 2020

ஜாமிஆ நளீமிய்யாவின் கெளரவ பணிப்பாளர் கல்விமான் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரீ அவர்களின் மரணச் செய்தி கேட்டு கவலையடைகின்றேன் - சட்டத்தரணி ஹபீப் றிபான்

நளீம் ஹாஜியாரோடு இணைந்து நளீமியாவை ஸ்தாபிப்பதிலும் அதனை வளர்ப்பதிலும் சர்வதேச அந்தஸ்துக்கு அதனை உயர்த்துவதிலும் இலங்கையில் நடுநிலை சிந்தனையை அறிமுகப்படுத்துவதிலும் பெரும் பங்களிப்புச் செய்த கல்விமான் அறிஞர் கலாநிதி சுக்ரி அவர்கள்.

அவர்களது ஆற்றொழுக்கான உரைகளும் ஆழமான கருத்துக்கள் கொண்ட எழுத்துக்களும் பரந்த சிந்தனையும் இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் தடம் பதித்திருக்கின்றன. அன்னாரது சிந்தனையின் ஆழத்தை அவர்கள் கையாண்ட சொற்களூடாகக் கூட தெளிவாக புரியமுடியும்.1978 அக்டோபர் முதல் வெளிவரும் இஸ்லாமிய சிந்தனை சஞ்சிகையில் அவர்கள் எழுதி வந்த ஆக்கங்கள் அவர்களது சிந்தனையின் வீச்சுக்கான சிறந்த சான்றுகள்.

அவருக்காக நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவருக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான நன்றிக்கடன் அவர் இந்த நாட்டில் காண விரும்பிய சிந்தனை மாற்றத்தை அல்லது ஏற்படுத்த விரும்பிய சிந்தனை பாரம்பரியத்தை இந்த நாட்டில் முன்னெடுத்துச் செல்ல உழைப்பதாகும்.

அல்லாஹுத்தஆலா அன்னாருடைய நற்பணிகளை ஏற்று பாவங்களை மன்னித்து உயர்ந்த அந்தஸ்துகளை மறுமையில் வழங்குவானாக!

No comments:

Post a Comment