'ஈழம்' என்பதற்கான தவறான அர்த்தத்தை நீக்குமாறு கோரி 'த கார்டியன் பத்திரிகைக்கு' இலங்கை தூதரகம் கடிதம்! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

'ஈழம்' என்பதற்கான தவறான அர்த்தத்தை நீக்குமாறு கோரி 'த கார்டியன் பத்திரிகைக்கு' இலங்கை தூதரகம் கடிதம்!

பிரித்தானியாலில் இருந்து வெளியாகும் த கார்டியன் என்ற இணையத்தளத்தில் வெளியான போக்குவரத்து வினா விடையொன்றில் இலங்கையின் பூர்வீக பெயர் ஈழம் என தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் த கார்டியனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறித்த வினாவை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அதற்கு மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்து அனுப்பியுள்ளது. 

பிரித்தானியாவில் இருந்து வெளியான த கார்டியன் செய்திப் பத்திரிகையின் 2020 மே 15 ஆம் திகதி இணையத்தளப் பதிப்பில் வெளியிடப்பட்ட 'சுற்றுலா வினா விடைப் போட்டியில், ஈழம் என்பது எந்தப் பிரபலமான தீவின் பூர்வீகப் பெயர்? என வினவப்பட்டுள்ளது. 
இந்த வினாவிற்கான பதில் தெரிவுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஒருவர் இலங்கையை பதிலாகத் தேர்ந்தெடுத்து, அதை சரியான பதிலாகக் குறிப்பிடுகையில், 'இந்தத் தீவின் அண்மைய கிளர்ச்சி அமைப்பின் முழுப் பெயர் எல்.ரீ.ரீ.ஈ. - தமிழீழ விடுதலைப் புலிகள்' எனும் மேலதிக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தகவலின் தவறான தன்மை காரணமாக அதனை நீக்குமாறும் மன்னிப்புக் கோருமாறும் விடுத்தே பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் த கார்டியன் செய்திப் பத்திரிகையின் ஆசிரியருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. கார்டியன் இப்போது அதன் இணையத்தளத்தில் இருந்து குறித்த வினாடி வினாவை நீக்கியுள்ளது. 

பிரித்தானியாவிற்காக இலங்கை தூதரகம் த கார்டியன் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு

No comments:

Post a Comment