கெப் வாகனம் குடைசாய்ந்து விபத்து - இராணுவ கோப்ரல் பலி, 8 பேர் காயம் ! - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

கெப் வாகனம் குடைசாய்ந்து விபத்து - இராணுவ கோப்ரல் பலி, 8 பேர் காயம் !

பொலன்னறுவை, கிரித்தலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 08 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

இன்று (07) அதிகாலை பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியில் பயணித்த இராணுவத்தினரின் கெப் வாகனம், வீதியை விட்டு விலகிச் சென்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகனத்தில் 10 இராணுவத்தினர் பயணித்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிரித்தலை இராணுவ முகாமைச் சேர்ந்த 31 வயதான இராணுவ வீரர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad