இன்று அடையாளம் கண்ட 7 பேரில் 6 பேர் கடற்படையினர் - 13 மாத குழந்தை ஒன்றுக்கும் கொரோனா - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

இன்று அடையாளம் கண்ட 7 பேரில் 6 பேர் கடற்படையினர் - 13 மாத குழந்தை ஒன்றுக்கும் கொரோனா

இன்று (07) அடையாளம் காணப்பட்ட 07 பேரில் 06 பேர் கடற்படையினர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கடற்படை தம்பதியினரின் 13 மாத குழந்தை ஒன்றுக்கும் கொரோனா தொற்றியிருப்பது இன்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த தம்பதியினரின் மூத்த குழந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று கண்டறியப்பட்டதாக, அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றிய 804 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் தற்போது 563 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 232 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை 09 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 134 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad