ஸ்ரீலங்கா ரெலிகொம் கொவிட்-19 நிதியத்திற்கு 50 மில்லியன் ரூபா நன்கொடை - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 19, 2020

ஸ்ரீலங்கா ரெலிகொம் கொவிட்-19 நிதியத்திற்கு 50 மில்லியன் ரூபா நன்கொடை

ஸ்ரீலங்கா ரெலிகொம் (SLT) நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபையினர், முகாமைத்துவப் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து, ரூபா 50 மில்லியன் பெறுமதியான காசோலை ஒன்றை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர்.

இது, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் கோவிட் 19 சுகாதார சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் மொபிடெல் என்பன, தேசத்தின் முன்னணி தொலைத் தொடர்புத் தீர்வு வழங்குநர்கள் என்ற ரீதியில், அரசாங்கத்தின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருகின்றன.

இந்த நிதி நன்கொடைக்கு மேலதிகமாக, குழுமம் என்ற ரீதியில் சுமார் 350 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான பல்வேறு தொழில்நுட்பத் தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்து, முக்கிய பிரிவுகளில் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னணியாக செயற்பட உறுதியளித்துள்ளது.

அண்மையில் அமுலில் இருந்த Lockdown மற்றும் ஊரடங்குச் சட்ட காலப்பகுதிகளின் போது, SLT மற்றும் மொபிடெல் ஆகியன எந்தவித பாதிப்புக்களும் இல்லாமல், தமது சேவைகளைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுத்து, அனைவரையும் தரவு, குரல் மற்றும் மொபைல் தீர்வுகள் மூலம் இணைத்து வைத்தது.

SLT குழுமத் தலைவர் ரொஹான் பெனாண்டோ ஜனாதிபதியிடம் காசோலையை கையளித்தார்

No comments:

Post a Comment

Post Bottom Ad