யேமனில் அரச சார்பு படைகளுக்கும், பிரிவினைவாதிகளுக்குமிடையே தொடர் மோதல் : 14 பேர் பலி! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

யேமனில் அரச சார்பு படைகளுக்கும், பிரிவினைவாதிகளுக்குமிடையே தொடர் மோதல் : 14 பேர் பலி!

யேமனின் அபியன் மாகாணத்தில் அரச சார்பு படைகளுக்கும் தெற்கு பிரிவினைவாதிகளுக்குமிடையிலான தொடர்ச்சியான ஆறாவது நாள் மோதலில் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அரசாங்க சார்பு வீரர்கள் 10 பேர் உட்பட மொத்தாக 14 பேர் இந்த மோதலில் உயிரிழந்துள்ளதாக பெயரை வெளிப்படுத்தாத அரசாங்க இராணுவ அதிகாரியொருவர் சனிக்கிழமை ஏ.எப்.பி. நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். 

இரு தரப்பினரும் ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில், ஷேக் சேலம் கிராமம் மற்றும் சிஞ்சிபருக்கு வடகிழக்கில் உள்ள அல்-தரியா உள்ளிட்ட இரண்டு முனைகளில் நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஏப்ரல் மாதம் 26 அன்று பிரிவினைவாதிகள் தெற்கு யேமனில் ஏடன் உட்பட சுய இரஜ்ஜியத்தை அறிவித்த பின்னர், குறித்த பகுதியில் மோதல்கள் இடம்பெற்று வருகிறது. 

கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யேமனின் தலைநகரான சனாவைக் கைப்பற்றிய பின்னர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் இடைக்கால இடமாக ஏடன் இருந்து வருகிறார்.

No comments:

Post a Comment