"உறுதிப்படுத்தப்படாத பொய்யான செய்திகளைப் பகிர்வதை தவிருங்கள்'' - News View

Breaking

Post Top Ad

Monday, April 6, 2020

"உறுதிப்படுத்தப்படாத பொய்யான செய்திகளைப் பகிர்வதை தவிருங்கள்''

(நா.தனுஜா) 

உறுதிப்படுத்தப்படாத பொய்யான செய்திகளைப் பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. 

கொவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முடக்கப்பட இருப்பதாகவும், அனைத்து சேவை வழங்கல்களும் இடைநிறுத்தப்படும் என்றும் அண்மையில் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்ட போதிலும், அவற்றைப் பொலிஸ் ஊடகப் பிரிவு மறுத்திருந்தது. 

இந்நிலையிலேயே உறுதிப்படுத்தப்படாத பொய்யான செய்திகளைப் பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டிருக்கிறது. 

மேலும், இது மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துமெனவும், உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பகிர்வதைப் பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad