கொரோனாவை ஒழிக்க பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை - லக்ஷமன் யாப்பா அபேவர்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

கொரோனாவை ஒழிக்க பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை - லக்ஷமன் யாப்பா அபேவர்தன

(இராஜதுரை ஹஷான்) 

கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அவசியம் கிடையாது. அனைத்து தரப்பினரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் போதும் நிலைமையினை வெற்றிக் கொள்ள முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல முன்னேற்றகரமான திட்டங்களை செயற்படுத்துகின்றது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன. 

தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுமாறு குறிப்பிடப்படுகின்றது. பாராளுமன்றத்தை கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது. வீணர காலதாமதமே ஏற்படும். 

பாராளுமன்றத்தை கூட்டி அரச மற்றும் பொது நிர்வாகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் கிடையாது. நிதி தொடர்பான அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் ஊடாக கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே நிதி தொடர்பாக எவ்வித நெருக்கடியும் ஏற்படாது. 

தற்போதைய நெருக்கடியான நிலையில் ஒரு தரப்பினர் இனவாத, மதவாத கருத்துக்களை குறிப்பிட்டு மாறுப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல் ஒன்றினைந்து செயற்பட்டால் தற்போதைய நிலையினை வெற்றிக் கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment