பிரதமர் மஹிந்தவின் சுற்று நிரூபம் கைவிடப்பட வேண்டும் : தேசிய மக்கள் சக்தி மஹிந்தவுக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

பிரதமர் மஹிந்தவின் சுற்று நிரூபம் கைவிடப்பட வேண்டும் : தேசிய மக்கள் சக்தி மஹிந்தவுக்கு கடிதம்

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் அதனை கைவிட்டு புதிய சுற்று நிரூபம் வெளியிடுவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளருமான குழுக்களின் தலைவர் எஸ்.ஷாந்த பத்மகுமார சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் அதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்படுவதனால் அரச அதிகாரிகள் சங்கடத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். 

அரசியல்வாதிகளின் அழுத்தங்களின் காரணமாக அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் நிவாரண நடவடிக்கைகளின் போது சங்கடங்களுக்கு முகங்கொடுப்பதற்கான காரணியாகவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சுற்றுநிரூபத்தை கைவிட்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் புதிய சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்த கடித்தின் மூலம் கோரப்பட்டுள்ளது. 

அத்தோடு அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடாது எனத் தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கட்சி செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தினை அடிப்படையாகக் கொண்டே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment