பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவராவது பாதிப்பை ஏற்படுத்தினால் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவராவது பாதிப்பை ஏற்படுத்தினால் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

அரசாங்கத்தின் அறிவித்தலை மீறி பெருந்தோட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் அறிவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதற்காக தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளன. பொலிஸ் திணைக்களம், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு முக்கிய திணைக்களங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக பெருந்தோட்ட உற்பத்திகளை பாதிக்கும் வகையில் யாரேனும் செயற்படுவார்களாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். 

071-4415160 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு மேலதிக செயலாளர் அருணி ரனசிங்கவை தொடர்பு கொண்டு தகவல்களை தெரியப்படுத்த முடியும். அவர் அவை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவார். 

மேலும் வாட்ஸ் எப்(WhatsApp), வைபர் (Viber) மூலம் தொடர்பு கொள்வதற்கு 071-1692692 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம். அதேபோன்று mpliandea@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தகவல்களை தெரிவிக்க முடியும். 

மேலும், பிரதேச சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தொழிலில் ஈடுபடுமாறு வலியுறுத்துகின்றோம் என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவித்தாரன தெரிவித்தார்.

No comments:

Post a Comment