பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை : மத்திய வங்கி ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை : மத்திய வங்கி ஆளுநர்

மக்கள் நலனுக்கான பரிந்துரைகளை அமுல்படுத்த தவறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என மத்திய வங்கியின் ஆளுநர், பேராசிரியர் டபிள்யு.டி லக்ஷ்மன் அறிவுறுத்தியுள்ளார். 

அத்துடன் சர்வதேச நிதியை நாட்டிற்கு கொண்டுவருதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அனைத்து இலங்கையர்களிடமும் நாட்டிலுள்ள வெளிநாட்டவர்களிடமும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளை அடுத்து பொதுமக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடமையாகின்றது. அந்த செயற்பாடுகளிலிருந்து விலகும் பட்சத்தில் நாம் சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்படும். ஆகவே அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்த வேண்டாம். 

மேலும், கொரோனாவினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கில், நாட்டு மக்கள், வெளிநாடுகளிலிலுள்ள இலங்கையர்கள், இலங்கையை நேசிக்கும் வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு இருப்பு மற்றும் நிதியத்தை இலங்கையின் வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவது அவசியமாகின்றது. 

நாட்டின் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் சிறப்பு நிதி நிறுவனங்களுக்கு, அவற்றை முன்னெடுத்துச் செல்ல விசேட நிவாரணங்கள் வழங்குவற்குரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். 

அது தொடர்பில் காணப்படும் அந்நிய செலாவணி விதிமுறைகளை தளர்த்தவும் முழுமையான வரிவிலக்குகளை வழங்குவதற்கும் தயாராகி வருகின்றோம். 

சர்வதேசத்தில் இருந்து நிதியை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு கடந்த இரண்டாம் திகதி முதல் அடுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை முகங்கொடுப்பதற்கு இது பாரிய ஒத்துழைப்பை வழங்குவதாக இருக்கும் என்றுள்ளது

No comments:

Post a Comment