பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் அதிவிசேட வர்த்தமானியினை வெளியிட்டார் ஜனாதிபதி! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் அதிவிசேட வர்த்தமானியினை வெளியிட்டார் ஜனாதிபதி!

பொதுமக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் முப்படையினரை நாடு முழுவதும் ஈடுபடுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 40ஆம் அத்தியாயத்தில், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை ஆகியவற்றுக்கு பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய நாடு முழுவதிலும் உள்ள நிர்வாக மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினரை ஈடுபடுத்தும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment