சீனாவில் உள்ள பல ஆய்வுகூடங்களை பார்வையிடுவதற்கு உலக நாடுகளிற்கு அனுமதி தேவை - அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

சீனாவில் உள்ள பல ஆய்வுகூடங்களை பார்வையிடுவதற்கு உலக நாடுகளிற்கு அனுமதி தேவை - அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ

கொரோனா வைரஸ் எங்கிருந்து தோற்றம் பெற்றது என்பதை உறுதி செய்வதற்காக உலக நாடுகள் சீனாவில் உள்ள ஆய்வு கூடங்களை பார்வையிடுவது அவசியம் என அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார். 

உலக நாடுகளிற்கு சீனாவின் ஆய்வுகூடங்களிற்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

வைரஸ் உருவானது எவ்வாறு என்ற கேள்விக்கு சீனாவின் ஆய்வு கூடங்களை பார்வையிடுவது முக்கியமானதாக விளங்கும் என குறிப்பிட்டுள்ள மைக்பொம்பியோ இந்த கேள்விக்கு பதில் கிடைப்பதும் அவசியம் என தெரிவித்துள்ளார். 

இந்த விடை வெறுமனே வரலாற்று ரீதியானது மாத்திரமல்ல, இதன் மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் மீண்டும் இடம்பெறுவதை தடுப்பதற்கும் இந்த விடைகள் அவசியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெளிப்படை தன்மையும் உலக நாடுகள் சீனாவின் ஆய்வுகூடங்களிற்கு செல்வதற்கான சந்தர்ப்பமும் காணப்பட வேண்டிய நேரமிது என மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார். சீனாவில் உள்ள பல ஆய்வு கூடங்களை உலக நாடுகள் ஆராய வேண்டியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார். 

சீனாவில் இந்த ஆய்கூடங்கள் உள்ளன, வுகானில் உள்ள ஆய்வு கூடங்கள் குறித்து மாத்திரம் நான் குறிப்பிடவில்லை, சீனாவில் பல ஆய்வு கூடங்கள் உள்ளன, சீனா கம்யுனிஸ்ட் கட்சி இங்கு பல வகையான நோய்கிருமிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். 
இவ்வாறான ஆபத்தான பொருட்களுடன் பணியாற்றுகின்றவர்கள் தவறுதலாக அவை வெளியேறுவதை தடுப்பதற்கான திறனை கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான சர்வதேச முயற்சி அவசியம் எனவும் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் சீனாவிலேயே உருவானது என மீண்டும் தெரிவித்தள்ள மைக்பொம்பியோ வைரஸ் ஐரோப்பாவில் உருவானது எனவும், அமெரிக்க இராணுவம் சீனாவிற்கு கொண்டுவந்தது எனவும் போலி பிரச்சாரங்களை மேற்கொண்டமைக்காக சீன அரசாங்கத்தை சாடியுள்ளார். 

இது ஆபத்தானது, இது அரசியல் இல்லை, உயிர்களை காப்பாற்றுவதற்க்கா வைரசின் இயல்பு மற்றும் அதன் பயணப்பாதை என்பன குறித்து உங்களிற்கு தெரிந்திருக்க வேண்டும் எனவும் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் இதனை சீன அரசாங்கம் செய்யவில்லை அவர்கள் மிக மெதுவாக செயற்பட்டனர் என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார். 

சீனாவிடமிருந்து தகவல்களை உடனடியாக கேட்காதமைக்காக உலக சுகாதார ஸ்தாபனத்தை மைக்பொம்பியோ சாடியுள்ளார். வைரஸ் குறித்த தகவல் வேகமாக கிடைக்கவில்லை, உலக சுகாதார ஸ்தாபனம் அந்த தகவலை கோரவில்லை எனவும் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment