தோட்டப்பகுதிகளில் அதிக விலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை - முன்னாள் எம்.பி. அரவிந்தகுமார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 7, 2020

தோட்டப்பகுதிகளில் அதிக விலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை - முன்னாள் எம்.பி. அரவிந்தகுமார்

பெருந்தோட்ட மக்களுக்கு தோட்ட நிறுவாகங்களால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை இடைத்தரகர்கள் தலையிட்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கு மீண்டும் அறவிடும் முறையிலேயே பொருட்கள் வழங்கப்படும் நிலையில் சில தோட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இவ்வாறான செயற்பாடு இடம்பெற்று வருகிறது. நகர்புற கடைகளுடன் ஒப்பிடும் போது அத்தியாவசிய பொருட்கள் 10 ரூபா அதிகமாகவே தோட்டங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே இதற்கு பெருந்தோட்ட மக்கள் அகப்படாமல் உசாராக இருக்க வேண்டியது அவசியம். அதிக விலையில் பொருட்களை விற்றால் அதனை கொள்வனவு செய்ய போவதில்லை என்பதை தோட்ட நிர்வாகங்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சில தோட்ட நிர்வாகங்களும், இடைத்தரகர்களும் இணைந்து இவ்வாறு பெருந்தோட்ட மக்களின் பணத்தை உரிஞ்சும் செயற்பாட்டை கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment