அவுஸ்திரேலியாவை மீண்டும் வைரஸ் தாக்கும் ஆபத்துள்ளது - தலைமை மருத்துவ அதிகாரி - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

அவுஸ்திரேலியாவை மீண்டும் வைரஸ் தாக்கும் ஆபத்துள்ளது - தலைமை மருத்துவ அதிகாரி

அவுஸ்திரேலியாவை இரண்டவாது சுற்று வைரஸ் தாக்கும் நிரந்தர ஆபத்துள்ளது என தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் பிரென்டன் மேர்பி எச்சரித்துள்ளார். 

செனெட் விசாரணையொன்றின் போது அளித்த வாக்குமூலத்தில் பிரென்டன் மேர்பி இதனை தெரிவித்துள்ளார். 

ஆரம்பத்தில் வைரசினை கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக செயற்பட்டு தற்போது மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரினை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 24 மணி நேரத்தில் வைரசினால் ஏழு பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது, நாங்கள் சிறந்த நிலையில் இருக்கின்றோம் ஆனால் இரண்டாம் சுற்று நோய்த்தாக்கம் குறித்த நிரந்தர அபாயம் உள்ளது என்பதை நாங்கள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் என அவர் தெரிவித்துள்ளார். 

அவுஸ்திரேலியாவின் எல்லையை மூடி அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த அவுஸ்திரேலியர்களை தனிமைப்படுத்துவது என்ற முடிவே மிகச்சிறந்த தீர்மானம் என பிரென்டன் மேர்பி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment