உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்களின் மின்னஞ்சல்களுக்குள் ஊடுருவ மர்ம நபர்கள் முயற்சி - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்களின் மின்னஞ்சல்களுக்குள் ஊடுருவ மர்ம நபர்கள் முயற்சி

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய அதிகாரிகள் பணியாளர்களின் மின்னஞ்சல்களை ஹக் செய்வதற்கான முயற்சிகளை ஈரான் சார்பு ஹக்கெர்கள் மேற்கொண்டுள்ளனர் என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஈரான் சார்பில் செயற்பட்டவர்களால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்களின் மின்னஞ்சல்களுக்குள் ஊடுருவ முடிந்ததா என்பது தெரியவில்லை என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. 

எனினும் உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் மின்னஞ்சல்களுக்குள் ஊடுருவ விபரங்களை அறிய முயலும் முயற்சிகள் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. 

மார்ச் மாதத்திற்கு பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தினதும் ஏனைய அமைப்புகளினதும் பணியாளர்களின் மின்னஞ்சல்களுக்குள் ஊடுருவ முயற்சிகள் அதிகரித்துள்ளன என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. 

மார்ச் 2 ஆம் திகதி முதல் இந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்களின் மின்னஞ்சல்களுக்கு ஆபத்தான - தீங்கை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை அனுப்பி அதன் மூலம் அவர்களின் கடவுச்சீட்டினை களவாடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. 

ஈரான் ஆதரவு ஹக்கர்கள் சர்வதேச சுகாதார அமைப்புகளின் மின்னஞ்சல்களுக்கு ஊடுருவ முயல்கின்றனர் என தோன்றுகின்றது என சிலர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர். 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் இதனை உறுதி செய்துள்ள அதேவேளை யார் இதனை செய்ய முயல்கின்றனர் என தெரியவில்லை அவர்களது முயற்சி வெற்றியளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment