ஜப்பானில் அவசர நிலையை அறிவித்தார் பிரதமர் ஷின்ஜோ அபே - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 7, 2020

ஜப்பானில் அவசர நிலையை அறிவித்தார் பிரதமர் ஷின்ஜோ அபே

ஜப்பானில் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் அதிகமாகி உள்ள நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோ உட்பட சில பிராந்தியங்களில் அவசர நிலையை பிரதமர் ஷின்ஜோ அபே அறிவித்துள்ளார்.

டோக்கியோ உட்பட ஏழு பகுதிகளில் புதன்கிழமை நடைமுறைக்கு வரும் அவசரகால நிலை ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

திங்கட்கிழமை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 252 பேர் புதிதாக நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே அரசாங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 

பொதுப்போக்குவரத்து முடக்கப்படாது வணிக வளாகங்கள் திறந்திருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்களை சமூகதனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

திங்கட்கிழமை டோக்கியோவில் மருத்துவ அவசர நிலையை அறிவித்திருந்த மருத்துவர்கள் தலைநகரின் சுகாதார சேவை வீழ்ச்சி காணாலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பதில் இடநெருக்கடி தோன்றலாம் இதனால் மருத்துவமனைகளில் நோய் பரவலாம் என டோக்கியோவின் மருத்துவ சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இது இடம்பெற்றால் மருத்துவ பணியாளர்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கிசிச்சை வழங்க முடியாத நிலையேற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

No comments:

Post a Comment