ஒருதலைப்பட்சமாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விரும்பவில்லை - முன்னாள் சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

ஒருதலைப்பட்சமாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விரும்பவில்லை - முன்னாள் சபாநாயகர்

இலங்கையின் 8 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய ஒருதலைப்பட்சமாக தான் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விரும்புவதாக வெளியான செய்திகளை கடுமயாக மறுத்துள்ளார்.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் ஒருதலைப்பட்சமாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவேன் என்ற செய்திகள் பொய்யானவை.

கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு மற்றொரு அரசியலமைப்பு நெருக்கடி தேவையற்றது. நெருக்கடியான பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு வழங்க சர்வாதிகார நடவடிக்கை அவசியமாகும். எந்தவொரு இன்னலான சூழ்நிலையிலும் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) முன்னாள் சபாநாயகர் தலைமையில் அவரது இன்று அரசியலமைப்புப் பேரவை கூடுகின்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சபையின் முன்னாள் அலுவலக உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

කොරෝනා අර්බුදයට මුහුණ දී සිටින ශ්‍රී ලංකාවට තවත් ව්‍යවස්ථා අර්බුදයක් අනවශ්‍යය. එබැවින්, මවිසින් ඒකපාර්ශිකව පාර්ලිමේන්තුව රැස් කරනු ඇතැයි යන්න සම්පූර්ණයෙන්ම අසත්‍ය වේ. අර්බුදයක් වැළැක්වීමට විධායකය කටයුතු කළ යුුතු වේ. යම් මතභේදයකදී, අධිකරණයේ නියෝගය ගරු කිරීමට මම බැඳී සිටිමි.
கொரோனாவு பிரச்சினைக்குள் அரசியலமைப்புப் பிரச்சினை தேவையில்லை. நான் ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் கூட்டப் போவதாக பரவும் வதந்தி பொய்யானது. பிரச்சினையைத் தவிர்க்க நிறைவேற்றுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். முரண்பாடுகளின் போது நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளிப்பது எனது கடமையாகும்.
See Karu Jayasuriya's other Tweets

No comments:

Post a Comment