தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார் பிரித்தானிய பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார் பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் அறிகுறி தீவிரமடைந்ததால் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சென் தோமஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், அவருக்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்ததையடுத்து, தற்போது அவர், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

அங்கு அவருக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கப்படு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது. 

மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட, முதல் உலக நாடுகளின் அரச பிரமுகர் பொரிஸ் ஜோன்சன் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. 

உலகின் 209 பிராந்தியங்கள் உட்பட நாடுகளுக்கு பரவியுள்ள இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

இங்கிலாந்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 51 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் தாக்கத்திற்கு இதுவரை 5 ஆயிரத்து 373 பேர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையிலேயே இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் (வயது 55) கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொரிஸ் ஜோன்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகின்ற நிலையில், தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment