முதலீடுகள் தொடர்பில் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் 3 மாதங்களுக்கு இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

முதலீடுகள் தொடர்பில் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் 3 மாதங்களுக்கு இடைநிறுத்தம்

இலங்கையில் வசிக்கும் ஒருவரால் வெளிநாட்டில் முதலீடு செய்யும் பொருட்டான மூலதன கணக்கின் ஊடான அந்நியச் செலாவணி கொடுப்பனவு மற்றும் அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழ் முதலீட்டாளரால் இலங்கைக்கு வெளியில் வதியும் ஒருவரிடம் பெறப்பட்ட வெளிநாட்டு வர்த்தக கடன் மூலம் செலுத்த வேண்டிய செலாவணி உள்ளிட்டவற்றை அறவிடுவது, 3 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 இலக்கம் 12 எனும் அந்நியச் செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் இது தொடர்பில் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 2017 நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட 2045/56 எனும் வர்த்தமானி அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ள 2017 இலக்கம் 1 இல் வழங்கப்பட்ட அறிவிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment