ஆயுர்வேத முறைகளுக்கு ஏற்ப கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிராக மாற்று மருந்தைக் கண்டுபிடிக்குமாறு சுதேச மருத்துவ பயிற்சியாளர்களிடம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

ஆயுர்வேத முறைகளுக்கு ஏற்ப கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிராக மாற்று மருந்தைக் கண்டுபிடிக்குமாறு சுதேச மருத்துவ பயிற்சியாளர்களிடம் வேண்டுகோள்

(எம்.மனோசித்ரா) 

ஆயுர்வேத முறைகளுக்கு ஏற்ப கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மாற்று மருந்தைக் கண்டுபிடிக்குமாறு சுதேச மருத்துவ பயிற்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சு மற்றும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இராஜகிரியவிலுள்ள கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் அறுபதுக்கும் மேற்பட்ட முன்னணி சுதேச மருத்துவ பயிற்சியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. 

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் ஆயுர்வேத மருத்துவ கவுன்சில் (ஏ.எம்.சி), நோப்கோ மற்றும் முன்னாள் இராணுவ தளபதியும், இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவருமான ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, நோப்கோவின் தலைவரும் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இது தொடர்பில் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது இதன்போது 'ஆயுர்வேதம்' மற்றும் 'சித்த' முறைகளுக்கு ஏற்ப நாட்டில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ள 'ஹெலா வெடகமா' மூலம் கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த மாற்று பாரம்பரிய மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியங்களை உடனடியாக ஆராயுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 
ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க மூலிகை மற்றும் சுதேச நிபுணத்துவத்திற்கு சாட்சியமளிக்கும் வரலாற்று மற்றும் மூதாதையர் வேர்களைக் கண்டுபிடிக்கும் சட்டசபையின் நோக்கத்தை, அது எப்படி கவர்ச்சியான மூலிகை மருந்து கலவைகள் மற்றும் பிற நடைமுறைகளைப் பயன்படுத்தி மக்களை திறம்பட குணப்படுத்தியது என்பதை தெளிவுபடுத்தினார். 

ஆயுர்வேத பயிற்சியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு விளக்கக் காட்சி, இந்த கொடிய தொற்று நோய் மற்றும் பிற தொடர்புடைய தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிகிச்சையளிப்பதில் உள்நாட்டு மருத்துவ நடைமுறைகள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை விளக்கின. 

உள்நாட்டு நடைமுறைகளின் முன்னெச்சரிக்கை, நோய் தீர்க்கும் மற்றும் சிகிச்சைக்கு பிந்தைய கட்டங்களை உள்ளடக்கியது. கொடிய தொற்று நோய்க்கு நிரந்தர மருத்துவ தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு பயிற்சியாளர்கள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற நடைமுறைகளை எவ்வாறு துல்லியமாகப் பயன்படுத்தலாம் என்பதை சுட்டிக்காட்டினர். 

கலந்துரையாடல்களின் இறுதியில் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் சீனா தற்போது கண்டுபிடித்ததைப் போலவே, ஒரு மாற்று சுதேசிய மருந்தை விரைவாகக் கண்டுபிடிக்குமாறு வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment