13 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - கம்பஹா, நீர்கொழும்பு, களனி, புத்தளம், பாணந்துறை, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே அதிகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

13 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - கம்பஹா, நீர்கொழும்பு, களனி, புத்தளம், பாணந்துறை, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே அதிகம்

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட 10,039 பேர் இன்று (02) மாலை வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 20 ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை பேணாதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இக்கால கட்டத்தில், 2,489 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா, நீர்கொழும்பு, களனி, புத்தளம், பாணந்துறை, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இப்பிரதேசங்களை அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவும் இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், மக்கள் இவ்வாறு நடந்து கொள்வது வீரச் செயல் என நினைக்கின்றனர். ஆயினும் இது மிகவும் கேவலமானதும், பொறுப்பற்ற செயலுமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment