பாராளுமன்றம், அமைச்சர்களின் இல்லங்களை மருத்துவ கண்காணிப்பு நிலையங்களாக பயன்படுத்தலாம் - விதுர விக்கிரமநாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

பாராளுமன்றம், அமைச்சர்களின் இல்லங்களை மருத்துவ கண்காணிப்பு நிலையங்களாக பயன்படுத்தலாம் - விதுர விக்கிரமநாயக்க

(எம்.மனோசித்ரா) 

பாராளுமன்றத்தை கூட்டி 92 இலட்சம் ரூபாவை வீண் செலவு செய்வதற்கு பதிலாக பாராளுமன்றத்தையே மருத்துவ கண்காணிப்பு நிலையமாக பயன்படுத்தினால் அந்த பணத்தை மீதப்படுத்த முடியும் என்று முன்னாள் இராஜங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தை கூட்டுமாறு சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். ஏன் இவ்வாறு கோருகின்றனர்? இவ்வாறானவர்கள் இல்லாமல் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்று எண்ணுகின்றனர். எவ்வித பயனும் இன்றி பாராளுமன்றத்தைக் கூட்டி 92 இலட்சம் வீண் செலவு செய்ய எதிர்பார்ப்பது எதற்காக? பாராளுமன்றம் கூட்டப்படாத சந்தர்ப்பத்திலும் 87 இலட்சம் செலவாகின்றது. 

பாராளுமன்றத்தை தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையமாகப் பயன்படுத்தினால் இந்த செலவு மீதப்படும் என்பது எனது நிலைப்பாடாகும். 

முன்னர் விவசாய அமைச்சிற்காக பயன்படுத்தப்பட்ட சுமார் 240 இலட்சம் ரூபாய் வாடகை செலுத்தப்பட்ட கட்டடத்தையும் மருத்துவ கண்காணிப்பு நிலையமாகப் பயன்படுத்த முடியும். அந்த கட்டடம் தொடர்பில் அரசாங்கத்துடன் இன்னும் ஒப்பந்தம் நடைமுறையிலிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அது மாத்திரமின்றி அமைச்சர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் காணப்படுகின்றன. அவற்றை மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆயதங்களைச் செய்யும் அலுவலகங்களாக பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment