பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடும் முயற்சி வீணானது - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடும் முயற்சி வீணானது

யாழ்ப்பாணத்தில் கடந்த 84 மணித்தியாலங்கள் நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (24) 8 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் அலைமோதினர்.

மாவட்டத்திலுள்ள அனைத்துச் சந்தைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மக்கள் குவிந்தனர்.

எனினும் பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், மருந்தகங்களில் பொலிஸாரின் அறிவுறுத்தலில் ஒவ்வொருவருக்கும் இடையே ஒரு மீற்றர் இடைவெளியில் வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

வீதி ஒழுங்குகளில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் ஈடுபட்டுள்ள நிலையிலும் நகரங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுச் சந்தகைகளில் மக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment