இளவரசர் ஹரி, மேகன் தம்பதியை பாதுகாக்க அமெரிக்கா செலவு செய்யாது : ஜனாதிபதி ட்ரம்ப் - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

இளவரசர் ஹரி, மேகன் தம்பதியை பாதுகாக்க அமெரிக்கா செலவு செய்யாது : ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கான பாதுகாப்பு கட்டணத்தை அவர்கள்தான் செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஹரி தம்பதியினரின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா செலவிடாது என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், நான் இங்கிலாந்து ராணியின் சிறந்த நண்பராவேன். ஹரியும், மேகனும் அரச குடும்பத்தைவிட்டுவிட்டு கனடாவில் நிரந்தரமாக வசிப்பார்கள் என கேள்விப்பட்டேன். தற்போது கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியெர்ந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு கட்டணத்தை அவர்கள்தான் செலுத்த வேண்டும். அமெரிக்க அரசு செலுத்தாது என டுவிட்டரில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

ஹரி மற்றும் மேகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அமெரிக்க அரசாங்க உதவியை பெறப் போவதில்லை. தனியார் பாதுகாப்பு நிதியை பயன்படுத்தப் போவதாக குறிப்பிட்டிருந்தனர். 

அதேவேளை, பிரிட்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் நாளை மார்ச் 31 ஆம் திகதியுடன் விலகுகின்றனர். இதனையடுத்து ஹரி - மேகன் தம்பதி ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனை விவகாரங்களில் இருந்து முழுமையாக வெளியேறிவிடுவர் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இளவரசர் ஹரியின் தந்தையான இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என அண்மையில் பக்கிங்ஹாம் அரண்மனை கூறியது. 93 வயதான இரண்டாம் எலிசபெத், 98 வயதான இளவரசர் பிலிப் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment