வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டத்தினை கடைப்பிடித்து நடக்கும் மக்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டத்தினை கடைப்பிடித்து நடக்கும் மக்கள்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

இரண்டாவது தடவையாக நாடலாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டமானது இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் ஊரடங்கு சட்ட நடைமுறையினை கடைப்பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது.

வீதிகளில் முக்கிய தேவை ஏதும் இல்லாமல் திரிவோருக்கு எதிராக இரானுவத்தினரும் பொலிஸாரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.

சுகாதார துறையினர் அத்தியாவசிய சேவைக்கு பணிக்கப்பட்ட அதிகாரிகள், விவசாயிகள் அனுமதி பெற்று நடமாடும் மீன் மற்றும் மரக்கறி வியாபாரிகள் தங்களது கடமைகளை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சகல பிரதான வீதிகளும் வெறிச்சோடி காணப்படுவதுடன் அனைத்து வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் நடமாட்டங்களும் அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்களையும் அவதானிக்க முடிகின்றது.

No comments:

Post a Comment