மஹிந்த தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை : ஜனாதிபதி மக்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்றவில்லை - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

மஹிந்த தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை : ஜனாதிபதி மக்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்றவில்லை

(ஆர்.விதுஷா) 

நாட்டு மக்கள் ஜனாதிபதியிடம் எதிர்பார்த்த எந்த விடயமும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், பல பதவிகளை வகித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை எனவும் வலியுறுத்தினார். 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல், மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காகவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவை மக்கள் ஆதரித்திருந்தனர். 

ஆனால் இன்று, மக்கள் எதிர்பார்த்த எதையாவது இந்த அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா? கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பெயரளவிலேயே ஜனாதபதியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு அதிகாரங்கள் இல்லாத நிலைமையே காணப்படுவதாகவும் அவர் சுட்க்காட்டினார். 

இராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments:

Post a Comment