வங்கிச் சேவை, அத்தியாவசிய சேவை என்பதால் ஊரடங்கு வேளையிலும் கடமையில் ஈடுபட முடியும் - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

வங்கிச் சேவை, அத்தியாவசிய சேவை என்பதால் ஊரடங்கு வேளையிலும் கடமையில் ஈடுபட முடியும்

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

எனினும் வங்கிச் சேவை பொதுமக்களின் அத்தியாவசிய சேவை என்பதால், வங்கி ஊழியர் சேவைக்கான அடையாள அட்டையை பயன்படுத்தி கடமையில் ஈடுபட முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

எனினும் கடமைகளில் ஈடுபடும் போது மிகுந்த அவதானத்துடனும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் தேவை நிமித்தம் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment