பக்கிங்ஹாம் அரண்மனை ஊழியருக்கு கொரோனா - எலிசபெத் மகாராணியையும் நெருங்கியதா? - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

பக்கிங்ஹாம் அரண்மனை ஊழியருக்கு கொரோனா - எலிசபெத் மகாராணியையும் நெருங்கியதா?

இரண்டாம் எலிசபெத் மகாராணி பிரிட்டன், பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்கியிருந்த காலக் கட்டத்தில் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவல் அச்சம் காரணமாக 93 வயதான இரண்டாம் எலிசபெத் மகாராணியும், 98 வயதான அவரது கணவர் இளவரசர் பலிப்பும் கடந்த 15 ஆம் திகதி பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறி வின்ட்சர் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

மாகாரணி பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்த காலக் கட்டத்திலேயே மேற்படி அரண்மனை ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் பெயர் குறிப்பிடப்படதா அந்த ஊழியருடன் தொடர்பு கொண்ட நபர்களை தற்போது தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கொரோனா தொற்று ஏற்பட்ட அரண்மனை ஊழியருடன் எலிசபெத் மகாராணி எந்தளவு தொடர்புகளை மேற்கொண்டிருந்தார் என்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பிரிட்டனில் இதுவரை 5,683 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 281 பேர் உயிரிழந்தும் உள்ளனர். 

இந்நிலையில் இரண்டாம் எலிசபெத் மகாராணி இறப்புக்கள் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து நாடு தழுவிய பீதிக்கு மத்தியில் உரையாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment