அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 3, 2020

அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இன்று (03) கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான வழக்கின் நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ரூமி மொஹமட்டிற்கு நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, சர்வதேச தேயிலை கண்காட்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, எதிர்வரும் ஏப்ரல் 10 - 25 வரை, அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை பரிசீலித்த நீதவான் அவர் மீது விதித்த பயணத் தடையை தளர்த்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.

இவ்வழக்கின், முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேகநபர்களான வெள்ளை வேன் சாரதிகள் என அடையாளப்படுத்திய சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகியோர் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கில் பிணை வழங்கப்பட்டிருந்த குறித்த இருவரும் கம்பஹாவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில், கம்பஹா நீதிமன்றத்தினால் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனும், அவர்களை மறைத்து இன்று பிற்பகல் மாஜிஸ்திரேட் குடியிருப்புக்கு சமர்ப்பிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad