கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தாது அரசாங்கம் ஆட்சியை கைப்பற்ற முயற்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 17, 2020

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தாது அரசாங்கம் ஆட்சியை கைப்பற்ற முயற்சி

(நா.தனுஜா) 

நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தி, அதனூடாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதே ராஜபக்ஷ தரப்பினரின் உத்தியாகும். அவ்வாறே இம்முறையும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய தருணத்தில் நடவடிக்கை எதனையும் எடுக்காமல், அதனூடாகத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். 

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட சஹ்ரான் குழுவினருக்கு, அதற்கு முன்னர் மஹிந்த தரப்பினரே நிதியளித்து வந்தார்கள். 

அதேபோன்று தற்போது ஆரம்பத்திலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், மீண்டும் மக்களின் உயிர்களைப் பலியெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகிவருகிறது. 

நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தி, அதனூடாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதையே ராஜபக்ஷ தரப்பினர் ஓர் உத்தியாகப் பின்பற்றி வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment