பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதி கிஹான் பிலாபிட்டியவுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை - News View

About Us

About Us

Breaking

Monday, March 2, 2020

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதி கிஹான் பிலாபிட்டியவுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிலியபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டியவுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பான வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாக அவர் பெயரிடப்பட்டுள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (02) இவ்வாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 02ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாஜிஸ்திரேட் மொஹமட் மிஹாய் உத்தரவிட்டார்.

குறித்த அழைப்பாணையை கொழும்பு குற்றப்பிரிவு ஊடாக நீதிபதி கிஹான் பிலாபிட்டியிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவினால் கிஹான் பிலபிட்டியவின் சேவை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment