இலங்கை - பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

இலங்கை - பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்

(ஆர்.ராம்) 

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு பரஸ்பர பிராந்திய ஒத்துழைப்புக்களை வழங்குவது குறித்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. 

இலங்கை வெளிவிகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிற்கும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற தொலைபேசி மூலமான கலந்துரையாடலின்போதே மேற்படி விடயம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும் இரு வெளிநாட்டு அமைச்சர்களுக்கிடையிலான உரையாடலின் போது, இரு நாடுகளும் கொரோனா தொற்றை கட்டப்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சவால்கள் அடுத்து எடுக்கவுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 

அத்துடன் பாக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி சுகாதாரத் துறையில் வளர்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக சார்க் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டை நடத்தவதற்கு பாகிஸ்தான் தயார் நிலையில் இருப்பதாக வலியுறுத்தினார். 

அத்துடன் உலக சுகாதார அவசர நிலையை கருத்தில் கொண்டு முதலில் காணொளி மூலமாக சார்க் நாடுகளுக்கிடையிலான சுகாதார மாநாட்டை ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர் முன்மொழிந்துள்ளார்.

No comments:

Post a Comment