அன்றாட கூலி வேலை செய்யும் ஏழைகளுக்கு இலவசமாக உலர் உணவுப் பொதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அஸாத் சாலி - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

அன்றாட கூலி வேலை செய்யும் ஏழைகளுக்கு இலவசமாக உலர் உணவுப் பொதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அஸாத் சாலி

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

அன்றாட கூலி வேலை செய்யும் ஏழைகளின் வாழ்வாதார நிலைமையை கருத்திற்கொண்டு இலவசமாக உலர் உணவுப் பொதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். 

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் எதிர்கொள்ளும் அசெளகரியம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அதில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுகின்ற வேளையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை காெள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருப்பதாக அறிவித்திருப்பதை பாராட்டுகின்றேன். 

அத்துடன் நாட்டில் அன்றாடம் உழைத்து வாழக் கூடியவர்களே அதிகம் இருக்கின்றனர். ஊரடங்கு காலப்பகுதியில் அந்த மக்கள் அத்தியாவசியப் பாெருட்களை கொள்வனவு செய்வதற்கு பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர். 

அதனால் அன்றாட கூலி வேலை செய்யும் ஏழைகளின் வாழ்வாதார நிலைமையை கருத்திற்கொண்டு அவர்களுக்கு இலவசமாக உலர் உணவுப் பொதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக நாடு முழுவதிலும் உலர் உணவுப் பொதிகள் இலவசமாக விநியோகிக்க நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும். 

அத்துடன் பருப்பு, டின் மீன் போன்ற பொருட்களின் விலையை குறைத்தது மாத்திரம் அல்லாமல் அந்த பொருட்கள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலைக்கு மக்களுக்கு கிடைக்கின்றதா என்பதை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும். 

சதொச போன்ற மொத்த விற்பனை நிலையங்களில் குறித்த பொருட்களை நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் கொள்வனவு செய்ய முடியுமாகின்றபோதும் சாதாரண சில்லறை கடைகளில் பருப்பு மற்றும் டின் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் கூடுதலான விலைக்கே விற்கப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. 

அதனால் அரசாங்கம் இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை தாராளமாக விநியோகிக்கவும் வசதி குறைந்த மக்களுக்கு இலவச நிவாரண பொதியொன்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment