காத்தான்குடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி போலியானது - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

காத்தான்குடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி போலியானது

காத்தான்குடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி போலியானது என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம். நசீர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொய்யான செய்தியொன்றை சமூக ஊடகங்களில் ஒருவரால் பரப்பட்டு வருகின்றன.

இது குறித்து காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம். நசீர்தீனிடம் கேட்ட போது, இது பொய்யான செய்தியெனவும் காத்தான்குடியில் அவ்வாறு எவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அடையாளப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் போலிச் செய்தியை பரப்பிய ஒருவருக்கு எதிராக காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள், காத்தான்குடி பொலிசார் ஊடாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(புதிய காத்தான்குடி நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

No comments:

Post a Comment