ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் போடப்பட்ட ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் கல்குடாப் பிரதேசத்தில் திங்கட்கிழமை வியாபார நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்டு பின்னர் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவாக காணப்படுகின்றது. வியாபார இடங்களில் வாகன நெரிசல் அதிகம் காணப்படுவதுடன், வீதியோரங்களில் முச்சக்கர வண்டிகளை நிறுத்தி விட்டு பொருட்கள் கொள்வனவு செய்வதால் அதிக நெரிசல் ஏற்படுவதைக் காணமுடிகின்றது.
வியாபார நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வரும் மக்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. மக்களின் பாதுகாப்பு கருதி வாழைச்சேனை பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச சபை, வாழைச்சேனை பொலிஸார் அதிக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மக்களின் பாதுகாப்பு கருதி அத்தியவசிய பொருட்கள் வாழைச்சேனை பொது மைதானம், ஓட்டமாவடி அமீர் அலி மைதானம், மீராவோடை அல் ஹிதாயா பாடசாலை மைதானம், காவத்தமுனை அல் அமீன் பாடசாலை மைதானம், வாகனேரி கோகுலம் வித்தியாலய மைதானம் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட்டது.

இதன் காரணமாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மக்களின் நெரிசலினை குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடமைகளில் ஈடுபட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளதுடன், வாகன போக்குவரத்துக்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றது.
ஊரடக்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள வேளைகளில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுவது அவசியமாகும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பல்பொருள் விற்பனை நிலையங்கள், வங்கிகள் மற்றும் மருந்தகங்களில் பொதுமக்கள் சுகாதார பகுதியினரால் விடுக்கப்பட்டுள்ள விதி முறைகளின் படி ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றி வரிசை கிரமமாக தங்களின் அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்கின்றனர்.

கொரோனா தொற்றினை நமது இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி விரைவில் நமது நாட்டை கொரோனா அற்ற நாடாக மாற்றி இயல்பு வாழ்கையை வாழ்வதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும்.

No comments:

Post a Comment