ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு - மர நடுகையும் சிரமதான நிகழ்வும் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 1, 2020

ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு - மர நடுகையும் சிரமதான நிகழ்வும்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவினூடாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு என்னும் தொனிப்பொருளில் பொழிவடைந்த கிராம வேலைத்திட்டத்தின் மூலம் மரநடுகை மற்றும் சிரமதானம் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

இதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மரநடுகை மற்றும் சிரமதான தேசிய வேலைத்திட்டம் இடம்பெற்றது.

இதன் போது, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், தியாவட்டவான் ஆயுள்வேத வைத்தியசாலை, தியாவட்டவான் மாரியம்மன் ஆலயம், தியாவட்டவான் ஜூம்ஆப் பள்ளிவாயல், தியாவட்டவான் பன்சாலை, தியாவட்டவான் கிறிஸ்தவ தேவாலயம் என்பவற்றில் சிரமதானமும் மரநடுகையும் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எச்.எம்.முஸம்மில், செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், மாவட்ட செயலக சமுர்த்தி முகாமையாளர் எஸ்.புவிதரன், மாவட்ட சமுர்த்தி கணக்காளர் எஸ்.பசீர், கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், வெலிக்கந்தை சிங்கபுர இராணுவ அதிகாரிகள், மதகுருமார்கள், செயலக மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad