சைக்கிள் ஓட்டப் போட்டி வைத்த தம்புள்ளை மேயர் உள்ளிட்ட இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, March 20, 2020

சைக்கிள் ஓட்டப் போட்டி வைத்த தம்புள்ளை மேயர் உள்ளிட்ட இருவர் கைது

தம்புள்ளை மாநகர சபை முதல்வர் ஜாலிய ஓபாத உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பது தொர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சைக்கிள் ஓட்டப் போட்டியை ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்ற குற்றத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுளள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சைக்கிளோட்டப் போட்டி தம்புள்ளை நகரில் நேற்று (19) காலை ஆரம்பமானதோடு, அதனை தம்புள்ளை மாநகர மேயர் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஜாலிய ஓபாத சமிக்ஞை செய்து ஆரம்பித்து வைத்திருந்தார்.

இது தொடர்பான சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெயானதைத் தொடர்ந்து இது தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்பியெழுப்பியதைத் தொடர்ந்து, இது தொடர்பில் விசாரிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய, தம்புள்ளை மாநகர சபை மேயரும், நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரும் இன்று (20) தம்புள்ளை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களை பிணையில் விடுவித்த தம்புள்ளை மாவட்ட நீதவான், தலா ரூபா. 1 மில்லியன் கொண்ட இரு சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad