85,000 கைதிகளின் தற்காலிக விடுதலையானது ஏப்ரல் 18 வரை தொடரும் - ஈரான் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

85,000 கைதிகளின் தற்காலிக விடுதலையானது ஏப்ரல் 18 வரை தொடரும் - ஈரான் ஜனாதிபதி

ஈரானில் கைதிகளின் தற்காலிக விடுதலையானது ஏப்ரல் 18 ஆம் திகதி வரை நீடிக்கும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி இன்றைய தினம் அரச தொலைக்காட்சியில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று அச்சம் காரணமான ஈரான் தற்காலிகமாக சுமார் 85,000 கைதிகளை விடுவித்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசின் எஸ்மெய்லி கடந்த வாரம் உறுதிப்படுத்தினார். 

இந்நிலையிலேயே அவர்களது தற்காலிக விடுமுறை குறித்து பதிலளிக்கையில் ஈரான் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இவேவேளை ஈரானின் 2.5 மில்லியன் அரச ஊழியர்களில் 1.2 மில்லியன் பேர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழில் புரியவில்லை என சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அத்தியாவசிய பொது சேவைகள் தொடரும். சுகாதாரத் துறை போன்ற துறைகளில் பணியாற்றும் மக்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுறுத்தியுள்ளார். 

ஈரானில் தற்போது 24,800 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 1,934 பேர் அதனால் உயிரிழந்தும் உள்ளனர். 

இந்நிலையில் ஈரானில் தற்போது 41 மில்லியன் பேர் வரை கொரோனா தொடர்பான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் சனத் தொகையில் சுமார் 50 சதவீதம் ஆகும். 

No comments:

Post a Comment