பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்க முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் 50 இலட்சம் ரூபாய் நிதி கையளிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்க முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் 50 இலட்சம் ரூபாய் நிதி கையளிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்க முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 50 இலட்சம் ரூபாய் வழங்கி வைத்தார்.

காத்தான்குடி, பாலமுனை, காங்கேயனோடை, பூனொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனமும், காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து தெரிவு செய்த நாளாந்தம் கூலித் தொழில் செய்கின்ற தற்போது வீடுகளில் முடங்கிக் கிடக்கும் வசதியற்ற 4000 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் சுமார் 50 இலட்சம் ரூபாய் நிதியினை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு வழங்கி வைத்தார்.

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி நகர சபை நகர முதல்வர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம் அஸ்பர் ஜே.பி, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும், காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து பள்ளி வாயல்களினூடாக தெரிவு செய்யப்பட்ட 4000 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad