கொரோனா வைரசுக்கு சீனாவை விட இத்தாலியில் அதிக உயிரிழப்பு - ஒரே நாளில் 427 பேர் பலி - 10 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, March 19, 2020

கொரோனா வைரசுக்கு சீனாவை விட இத்தாலியில் அதிக உயிரிழப்பு - ஒரே நாளில் 427 பேர் பலி - 10 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

கொரோனாவுக்கு இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவை விட இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 180 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதற்கிடையில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 45 ஆயிரத்து 834 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 88 ஆயிரத்து 441 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவை விட இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சீனாவில் 3 ஆயிரத்து 248 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரசுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 41 ஆயிரத்து 35 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவுக்கு சீனா விட இத்தாலியில் அதிகமானோர் உயிரிழந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment