சிரிய இராணுவத்தின் விமானங்கள், 100 டாங்கிகள், வான் பாதுகாப்பு அமைப்பு முறை அழிப்பு - துருக்கி தகவல் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 1, 2020

சிரிய இராணுவத்தின் விமானங்கள், 100 டாங்கிகள், வான் பாதுகாப்பு அமைப்பு முறை அழிப்பு - துருக்கி தகவல்

சிரிய இராணுவத்தின் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதுடன் அந்த நாட்டின் 100 ற்கும் மேற்பட்ட டாங்கிகளை அழித்துள்ளதாக தெரிவித்துள்ள துருக்கி சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறையும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சிரியாவின் தாக்குதலில் 30 ற்கும் அதிகமான தனது படையினர் கொல்லப்பட்ட பின்னர் ஆரம்பித்துள்ள நடவடிக்கை மூலம் சிரிய இராணுவத்தினரிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கி குறிப்பிட்டுள்ளது.

துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் குலுசி அகார் இதனை அறிவித்துள்ளார்.

துருக்கி சிரியாவில் மேற்கொண்டுள்ள நான்காவது நடவடிக்கையான ஸ்பிரிங் சீல்ட் மூலம் ஒரு ஆளில்லா விமானம், 8 ஹெலிக்கொப்டர்கள், 103 டாங்கிகள், 72 நீண்ட தூர பீரங்கிகள், ரொக்கட்ர் லோஞ்ஞர்கள் 06, வான் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பனவற்றை அழித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2122 சிரிய படையினர் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு ரஸ்யாவை எதிர்கொள்ளும் நோக்கம் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் சிரிய அரசாங்கம் தனது படுகொலைகளை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நாங்கள் அங்கிருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தீவிரவாதமயப்படுத்தல் மற்றும் இடம் பெயர்வை தடுக்க முயல்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று ஒரு ஆளில்லா விமானத்தையும் இரு விமானங்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad