பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரி கைதான நபருக்கு விளக்கமரியல் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரி கைதான நபருக்கு விளக்கமரியல்

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானுக்கு எதிராக முகநூல் ஊடாக சேறு பூசும் வேலைகளில் ஈடுபட்டும் அவற்றை நிறுத்தவேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கப்பம் கோரிய மக்கள் சேவை அமைப்பின் தலைவர் ரிஷாம் மரூஸ் என்பவர் நேற்றிரவு 2020.02.21 மடாட்டுகம பிரதேசத்தில் வைத்து அனுராதபுரம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் கொலன்னாவ வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தற்பொழுது கெக்கிராவ பண்டாரபொத்தான எனும் பிரதேசத்தில் திருமணம் செய்து வசித்து வருவதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி 28 ஆம் திகதி முதல் குறித்த நபர் முகநூலில் பாராளுமன்ற உறுப்பினரை போலிக் குற்றச் சாட்டுக்களை சுமத்தியும் தகாத வார்த்தைகளாலும் வீடியோ மூலம் விமர்சித்தும் வந்தார். 

இது தொடர்பில் அவர் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த ஜனவரி 30 ஆம் திகதி மடாட்டுகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நேரடியாக சந்தித்து பேசினார். இவ்வாறு நேரில் சந்தித்து பேசும்பொழுதே ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரியிருக்கின்றார்.
இது தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அனுராதபுரம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தார். 

அதையடுத்து அனுராதபுர பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் சந்த சிரியின் அறிவுருத்தலுக்கு அமைய ஒரு கோடி ரூபாயின் ஒரு பகுதி தொகையினை நேற்றிரவு 9.30 மணியளவில் மடாட்டுகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து வழங்கும்போது தலைமை ஆய்வாளர் சந்த சிரியின் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினரால் கைது செய்யப்பட்டு இன்று 22.02.2020 கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேக நபர் ரிஷாம் மரூஸின் மீது பாராளுமன்ற உறுப்பினரிடம் கப்பம் கோரியமை, பாராளுமன்ற உறுப்பினருக்கு அவப்பெயர் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமரியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஐ.எம்.மிதுன் கான்
கெக்கிராவ - கனேவல்பொல

No comments:

Post a Comment