குவைத் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் தொற்று - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

குவைத் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் தொற்று

கொவிட் 19 புதிய கொரோனா வைரஸ் தொற்று பல உயிர்களை காவு வாங்கியுள்ளதோடு சீனாவுக்கு வெளியில் இந்த வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. 

இந்நிலையில், குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளும் தங்களது முதல் கொரோனா வைரஸ் தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளன. பஹ்ரைனில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குவைத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

குறித்த கொவிட் 19 வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் ஈரானிலிருந்து வந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்கள். குவைத்தில் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் மூவரும் கடந்த வாரம் ஈரானிய நகரமான மஷாத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 700 பேரை பரிசோதணை செய்த போதே கண்டறியப்பட்டதாக குவைத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து "ஈரானிய நகரமான மஷாத்தில் இருந்து வருபவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில் கொவிட் 19 வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது" என்று குவைத் அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்த மூன்று நோயாளிகளில் 53 வயதான குவைத் நபர், 61 வயதான சவூதி பிரஜை மற்றும் 21 வயதான அரபு பிரஜையும் அடங்குவர் . இந்த மூவரும் சுகாதார அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்ற என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. 

இந்நிலையில், பஹ்ரைனின் சுகாதார அமைச்சகம் இன்று நாட்டின் முதல் கொவிட் 19 தொற்று சம்பவத்தை பதிவு செய்தது. இது ஈரானில் இருந்து வந்த பிரஜை நோய் அறிகுறிகளின் அடிப்படையில் வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

குறித்த நோயாளி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு நோய்த்தொற்று தொடர்பாக உடனடி பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது. 

No comments:

Post a Comment