சிரேஷ்ட பாடகர் ரோஹண பெத்தகேவை மாலைதீவுக்கான தூதுவராக நியமிக்க அனுமதி - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

சிரேஷ்ட பாடகர் ரோஹண பெத்தகேவை மாலைதீவுக்கான தூதுவராக நியமிக்க அனுமதி

மாலைதீவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக சிரேஷ்ட பாடகர் ரோஹண பெத்தகேவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த பரிந்துரைக்கு உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (28) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் முன்னிலையில் ரோஹண பெத்தகே அழைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஊப் ஹக்கீம், ஜோன் அமரதுங்க, தர்மலிங்கம் சித்தார்த்தன், எரான் விக்ரமரட்ன மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad