ஞானசார தேரர் உட்பட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு! - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

ஞானசார தேரர் உட்பட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றத்தில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த விகாரையில் தங்கியிருந்த பௌத்த பிக்குவின் பூதவுடல் நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்தி சிறிஸ்கந்தராஜா தாக்கல் செய்திருந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு மனு இவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதியரசர்கள் ஏ.ச்.எம். நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபயசேகர முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது நீதிபதிகள் ஞானசார தேரரை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment