கொழும்பு - மாத்தளை ரயில் சேவை ஐந்து நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

கொழும்பு - மாத்தளை ரயில் சேவை ஐந்து நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது

கொழும்பு, கோட்டை மற்றும் மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை ஐந்து தினங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதற்கமைய இப்புகையிரத சேவையை எதிர்வரும் இரண்டாம் திகதி முதல் முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது மாத்தளை வரை இப்புகையிரத சேவை திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில் மாத்திரமே இயங்குவதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவித்தார்.

புதிய நேர அட்டவணைக்கு அமைய வார நாட்களில் காலை 6.30 மணிக்கு மாத்தளையிலிருந்து கொழும்பு, கோட்டை வரையும் பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு, கோட்டையிலிருந்து மாத்தளை வரையும் குறித்த புகையிரத சேவை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad