சம்பந்தன், ஹக்கிமுடன் இணைவதற்கான எந்த நோக்கமுமில்லை - ஜே.வி.பி. - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

சம்பந்தன், ஹக்கிமுடன் இணைவதற்கான எந்த நோக்கமுமில்லை - ஜே.வி.பி.

(எம்.மனோசித்ரா) 

பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் என்பவற்றுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு ஜே.வி.பி. மறுப்பு தெரிவித்துள்ளது. 

பொதுத் தேர்தலில் எந்த கட்சியுடன் இணைந்து போட்டியிடும் நிலைப்பாட்டில் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி என்ற பெயரிலேயே களமிறங்க உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் ஜே.வி.பி. இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸின் மாநாட்டில் அதன் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்ததாகக் கூறி சில செய்திகள் வெளியாகியுள்ளன. 

அந்த செய்திகளில் உத்தேச பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்ரஸ், ஜே.வி.பி., தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்கள் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக ரவுப் ஹக்கீம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானதொரு செய்தியாகும். 

பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ அல்லது முஸ்லிம் காங்ரசுடனோ இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் ஜே.வி.பி. அவதானம் செலுத்தவில்லை. அவ்வாறானதொரு நிலைப்பாட்டிலும் நாம் இல்லை. அத்தோடு பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியிலேயே நாம் போட்டியிடுவோம்.

No comments:

Post a Comment