கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்த பல பிராந்தியங்களை தனிமைப்படுத்திய இத்தாலி! - News View

About Us

About Us

Breaking

Sunday, February 23, 2020

கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்த பல பிராந்தியங்களை தனிமைப்படுத்திய இத்தாலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகையானது இத்தாலியில் 79 ஆக உயர்வடைந்துள்ளமையினால், அந்நாட்டு பிரதமர் கியிசெப் கோன்டே நேற்று சனிக்கிழமை அவசரகால திட்டத்தை அறிவித்துள்ளார். 

இத்தாலியில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இத்தாலியின் லோம்பார்டி மற்றும் வெனெட்டோவின் வடக்கு பிராந்தியங்களில் உள்ள பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த இரண்டு பிராந்தியங்களிலும் சுமார் 50,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை இத்தாலியில் கொரோனா பரவியுள்ள மேற்படி பகுதிகளுக்கு சிறப்பு அனுமதியின்றி உட்புகவோ அல்லது வெளியேறவோ தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த பிராந்தியங்களிலம் இன்று நடைபெறவிருந்த கால்ப்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் அனைத்து பாடசாலை விளையாட்டுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment